தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெக - அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரையில் இன்று (மார்ச் 11) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “விஜய், அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக பல செய்திகளில் பார்த்தேன். கடைசி நேரத்தில் கூட மாறலாம். எங்களைப் பொறுத்தவரை தோழமை கட்சிகளை தோளில் வைத்து கொண்டாடுவோம். விஜய் மட்டுமல்ல யாராக இருந்தாலும் எங்கள் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் கொண்டாடுவோம்” என்றார்.
நன்றி: PT