தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை அடுத்து, மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லியில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக அரசு என்ன வேண்டுமானாலும் செய்யட்டும், தங்களுக்கு அணை கட்ட முழு உரிமை உள்ளதாக கூறிய அவர், விரிவான திட்ட அறிக்கையை (DPR) விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நன்றி:NewsonTamil