இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி 3 மடங்கு அதிகமாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (பிப்.12) நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு செயலாக்க மாநாட்டில் உரையாற்றிய அவர், தொழில்துறையில் தமிழ்நாடு படைத்துள்ள சாதனைகளை இனி வரும் காலங்களில் தங்களது அரசே முறியடிக்கும் என்றும், முதலீடுகளை வெறும் ஒப்பந்தங்களாக பார்க்காமல், அவை வேலைவாய்ப்புகளாக மாறும் வரை கண்காணிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
நன்றி:PT