ஈரான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் விதமாக, ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அப்பகுதி வழியாகச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் முற்றுகையிடப்பட்டு, வர்த்தகம் ரீதியாகக் கடுமையான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.