அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்போம்- புரட்சி பாரதம்

அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஆக.01) செய்தியாளர்களை சந்தித்த பூவை ஜெகன்மூர்த்தி, "அதிமுகவுடன் மட்டும் தான் கூட்டணியில் இருக்கிறோம். கொள்கை வேறு கூட்டணி வேறு. தேர்தலுக்கான கூட்டணி இது. அதிமுக கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வர வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளோம்" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி