சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்போம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு இன்று (பிப்., 06) பேட்டியளித்த அவர், 'தவாகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்வதை கட்சியின் 99% நிர்வாகிகள் விரும்பவில்லை. இந்த நிமிடம் வரை திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம்' என தெரிவித்தார். கடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் மட்டும் தவாக தலைவர் வேல்முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நன்றி: News18