சென்னையில் இன்று (ஜூலை 11), 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல் விற்பனை ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் விழா நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர், "இந்த புத்தகத்தை பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடப் புத்தகமாக வைக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். முதலில் என் கனவுப் படமாக எந்திரன் இருந்தது. தற்போது, 'வேள்பாரி'ஐ படமாக எடுக்க வேண்டும் என கனவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.