மனிதநேய ஜனநாயக கட்சியின் மதுரை மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, “கூட்டணி ஆட்சி, பலத்துக்கு மீறிய தொகுதிகளைக் கூட்டிக் கேட்பது போன்ற நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும். அந்த அடிப்படையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.