“தேர்தல் ஆணைய கூட்டத்திற்கு எங்களை அழைப்பது இல்லை” - தவெக விஜய்

தேர்தல் ஆணையம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தை அழைப்பதில்லை என அக்கட்சியின் தலைவர் விஜய் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விஜய் இன்று (நவ.15) அனுப்பிய கடிதத்தில், “பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான தவெக-வை அழைக்காமலேயே ஆலோசனைக் கூட்டங்களை மாநில தேர்தல் ஆணையர் நடத்துகிறார். இது ஜனநாயகம் ஆகாது. இனி நடைபெறும் அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டங்களுக்கு தவெக-வை அழைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி