தவெக அமைச்சர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து சிபிஐ கூட்டணியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் பரவிய நிலையில், மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். “நாங்கள் கூட்டணியிலும் இல்லை, அமைச்சரவையிலும் இல்லை; ஆளுநர் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். மதச்சார்பின்மையை நோக்கி நகரும் வரை தவெக-வை விமர்சிப்போம்” என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18