ஈரான் தனது படைகள் எதிரிகளின் அனைத்து நகர்வுகளையும் கண்காணித்து வருவதாகவும், அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அந்த பிராந்திய நாட்டின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகள் மீதும் இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது. கடந்த 13ஆம் தேதி ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் நடந்து வரும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. கார்க் பாரசீக தீவை கைப்பற்ற, அமெரிக்க படைகளை பயன்படுத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.