கூட்டணி குறித்து அடுத்த வாரம் அறிவிப்பேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி ஆட்சி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனவும், கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருவதாக கூறியுள்ளார். மேலும் தவெக கூட்டத்திற்கு 12 மணிக்கு அனுமதி வழங்கியது தவறு என கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி, தவெகவுக்கு ஆதரவு என பார்க்கையில் விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.