தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. தொடர்ந்து, ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இந்நிலையில், நேற்றைய தினம் இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று (மே.28) கூறுகையில், “அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதிமுகவில் பிளவு இல்லை. அதிமுகவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது குறித்து ஆராய்வோம்” என்றார்.