“காவிரி பாசனத்திற்கு நாளை நீர் திறப்பு” - முதலமைச்சர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர், “காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் நாளை (ஜூன் 12) காலை 9.30 மணியளவில் தண்ணீர் திறக்கப்படவுள்ளது” என்றார். மேலும், “வேளாண் இயந்திரங்கள் வாங்க மானியம், வேளாண் வாடகை மையங்கள் அமைக்க மானியம் தருகிறோம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி