தண்ணீர் லாரி மோதி 2 பேர் பலி.. பதறவைக்கும் வீடியோ

சென்னையை அடுத்த சென்னீர்குப்பத்தில் தண்ணீர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை மெட்ரோ வாட்டர் ஒப்பந்த லாரி ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனங்கள் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இது குறித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி