கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி அணை வேகமாக நிரம்பி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை தொடர்ந்தால் அணையில் இருந்து நீர் திறப்பு அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு ஓரிரு நாட்களில் தண்ணீர் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நன்றி: சன்நியூஸ்