மீண்டும் சர்ச்சையில் இர்பான் - ஏழைகளை ஏளனம் செய்த வீடியோ

பிரபல யூடியூபர் இர்பான் ரம்ஜான் பண்டிகையையொட்டி மனைவியுடன் ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி-சேலை வழங்கினார். காரில் இருந்தபடி சொகுசாக உதவி செய்த இர்பான், அதனை வாங்க குவிந்த மக்கள் கூட்டத்தை வசைபாடி புறப்பட்டுச் சென்றார். ஏழை மக்களின் செயலை, மனைவியுடன் கிண்டலடித்து பேசி, வயிறுகுலுங்கி சிரித்த இர்பானின் செயல் கண்டனத்தை குவித்துள்ளது. ஒருவரின் ஏழ்மை நிலை உங்களுக்கு சிரிப்பை வர வைக்கிறதா? என நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி