கேரளாவின் எர்ணாகுளம் அருகே ஆலுவாவில் உள்ள விலங்குகளின் கொழுப்பை பதப்படுத்தும் ஆலையில் இன்று (அக்., 06) அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இறந்தவர் வடமாநில தொழிலாளி. இச்சம்பவம் இடையாறு தொழிற்பேட்டையில் நடந்துள்ளது. அடுப்பு வெடித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.