தவெக தலைவர் விஜய் ஹெலிகாப்டரில் பரப்புரை நடத்த இருப்பதாக வெளியான தகவல்களுக்கு அக்கட்சியின் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று (அக்.29) செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், "கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்ததை அரசியலாக்க விரும்பவில்லை. விஜய் ஹெலிகாப்டரில் பரப்புரையா என்ற கேள்வி
யூகத்தின் அடிப்படையில் உள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தவெகவை முடக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.