காமராஜர் மறைந்தபோது அவருக்கு மெரினாவில் இடம் தர கருணாநிதி மறுத்தார் என்ற காங்.MLA தாரகையின் கருத்துக்கு திமுக Ex.அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் இன்று (செப்.1) பேசிய அவர், காமராஜர் ஒரு தேசிய தலைவர் என்பதால் கிண்டி காந்தி நினைவகம் அருகே அவருக்கு அரசு மரியாதை உடன் நினைவிடம் அமைத்தவர் அன்றைய CM கருணாநிதி என்று சுட்டிக்காட்டினார். மேலும், காமராஜரை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அன்றைய தினம் வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நன்றி:News18