தேவநாதன் சுதந்திர போராட்ட தியாகியா? - உயர்நீதிமன்றம் காட்டம்

நிதி மோசடி வழக்கில் சிறையில் உள்ள தேவநாதன் சுதந்திர போராட்ட தியாகியா? சிறையில் இருக்கட்டுமே என்று சென்னை உயர் நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களிடம் பல கோடி மோசடி செய்ததாக தேவநாதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், சொத்துக்களை விற்று பணத்தை திருப்பி செலுத்த தயாராக இருப்பதாக தேவநாதன் மனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி

✕
✕