அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிற்பகல் அகமதாபாத் விமான நிலையம் அருகே புறப்பட்ட 10 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் விமான விபத்துக்கு பறவை மோதியது காரணமா? என கேள்வியெழுந்துள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.