பணிகளை செய்யாவிட்டால் பதவி பறிக்கப்படும்: தவெகவினருக்கு எச்சரிக்கை

கட்சி பணிகளை சரியாக செய்யாதவர்களின் பதவிகள் பறிக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நேற்று (டிச.25) நடைபெற்ற தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் [பேசிய அவர், "வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்ற பணிகளை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். நிர்வாகிகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இலக்குகளை எட்ட தவறினால் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி