மீண்டும் போர் பதற்றம்: இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,677 புள்ளிகள் சரிந்து 76,503 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 516 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,882 புள்ளிகளாக நிறைவு பெற்றுள்ளது. ஈரான் உடனான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்ததால் சர்வதேச அளவில் ஜப்பான், தென்கொரியா உள்பட பல சந்தைகளும் சரிந்துள்ளன.

தொடர்புடைய செய்தி