இந்திய தேசத்துக்காக 3 போர்களில் பங்கேற்று 'வார் ஹீரோ' (War Hero) என்று புகழ்பெற்ற கரோடி திம்மப்பா ஆல்வா (85) வயது மூப்பின் காரணமாக காலமானார். மங்களூருவில் பிறந்த இவர், குறிப்பாக 1971 போரின்போது தாக்குதலுக்கு ஆளாகி சிட்டகாங் வனப்பகுதியில் உயிருக்கு போராடி பின்னர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். தனது சாகசமிக்க போர் அனுபவங்களை 'Garodi Maneyinda Sena Garadige' என்ற புத்தகமாக அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.