இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகளை எளிதாகக் கண்டறியவும், அங்குள்ள கல்விச் சூழலை புரிந்து கொள்ளவும் உக்ரைன் கல்வி மையம் எனும் புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய-உக்ரைன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதில், இந்திய மாணவர்கள் உக்ரைன் பல்கலைக்கழகங்கள், அங்குள்ள சேர்க்கை நடைமுறைகள் மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறலாம்.