டி20 உலக கோப்பை.. இலங்கை அணியிலிருந்து ஹசரங்கா விலகல்

டி20 உலக கோப்பை தொடரின் 10-ஆவது சீசன் கடந்த பிப். 7 கோலாகலமாகத் தொடங்கியது. கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற 6-ஆவது ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்த்து களம் கண்ட இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த நிலையில், அந்த அணியில் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு அயர்லாந்துக்கெதிரான ஆட்டத்தின்போது உடலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான சிகிச்சையில் இருப்பதால் உலக கோப்பை தொடரிலிருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக இலங்கை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி