விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவின் தாயார் புஷ்பம் ரத்தினசாமி இன்று (டிச., 05) காலமானார். விருதுநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவரது உயிர் பிரிந்தது. நாளை (டிச., 06) அவரது சொந்த கிராமமான அயன் ரெட்டியபட்டியில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.