1977-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட 'வாயேஜர் 1' விண்கலம், வியாழன் மற்றும் சனி கிரகங்களை ஆய்வு செய்த பிறகும் தனது விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. சுமார் 49 ஆண்டுகளாகப் பயணித்து வரும் இந்த விண்கலம், பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் (சுமார் 2,596 கோடி கி.மீ.) தூரத்தை இன்று எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் ஒன்று இவ்வளவு தொலைவைக் கடப்பது இதுவே முதல்முறையாகும்.