கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்., 09) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த வாக்குப்பதிவில், கேரளம் (140 தொகுதிகள்), அசாம் (126 தொகுதிகள்), புதுச்சேரி (30 தொகுதிகள்) என மொத்தம் 296 தொகுதிகளில் சுமார் 1,955 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக காலையிலேயே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர்.