திருப்பூர் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிலையில், மதுபோதையில் வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளர் ஒருவர் போலீஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியேற்றினர். டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுவை காலையிலேயே அருந்திவிட்டு வாக்காளர் ஓட்டுப்போட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சக வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நன்றி: சன்