புதுக்கோட்டை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், உண்மைத்தன்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில், “வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமான பணி. இந்தப் பணியை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செய்ய வேண்டும். சில பகுதிகளில் 70 சதவீதம் படிவங்கள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், சில பகுதிகளில் 20 சதவீதம் கூட வழங்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.