தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் பெயரில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களை பாதிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு செயல்படுவதாக அமைச்சர் கோவி. செழியன் குற்றம் சாட்டியுள்ளார். வெளி மாநிலத்தவரை தமிழகத்தில் சேர்க்கும் முயற்சி நடப்பதாகவும், இதை எதிர்க்க வேண்டிய அதிமுக மெளனமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பல்கலைக்கழகச் சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.