இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தகவலின்படி, தமிழகத்தில் அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 5 கோடி வாக்காளர்களுக்கு (78.09%) சிறப்புத் தீவிர திருத்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்புப் பணியில் 68,467 பி.எல்.ஓ. அதிகாரிகளும், 2.11 லட்சம் பூத் லெவல் ஏஜெண்டுகளும் ஈடுபட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.