எஸ்ஐஆர் விவகாரத்தைப் பொறுத்தவரை வாக்குத் திருட்டு முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் இன்று (நவ., 23) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை உண்டு. எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தேமுதிக அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வாய் அடைத்து போயுள்ளார்கள். எல்லா இடத்திலும் பூத் கமிட்டி அமைத்து ஆண்ட கட்சிக்கு இணையாக உள்ளோம் என்றார்.