திருச்சி மாவட்டம் ஆலம்பட்டியில் இன்று (பிப்.21) நாம் தமிழர் கட்சியின் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான மாநாட்டுக்கு வருகை தந்தார். அப்போது, அங்கிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமடைந்த சீமான், மாநாட்டு பந்தலுக்கு கை உயர்த்தி வீர நடை போட்டு வந்துள்ளார்.
நன்றி: NewsTamilTV24x7