விஜய் மாநாட்டுக்கு வந்த தொண்டர் மாரடைப்பால் மரணம்

மதுரை தவெக மாநாட்டிற்கு வரும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பாரபத்தியில் நடக்கும் 2-வது மாநில மாநாட்டில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து பிரபாகரன் என்பவர் வந்துள்ளார். அவர் சக்கிமங்கலம் அருகே வந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி