திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கூடுதல் தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில், இடம் தர மறுப்பதால், திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வாய்ப்பு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்றே இதுவரை பேசி வருகிறார்.