விசிகவுக்கும் தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாக விசிக எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று (மே 6) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெகவுக்கு ஆதரவு என்பது தொடர்பாக உரிய விளக்கத்தை எங்கள் தலைவர் (திருமாவளவன்) அறிவிப்பார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் தவெக ஆட்சியமைக்க விரும்புகிறது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், சிபிஐ, சிபிஎம், விசிகவும் ஆதரவு நிலைபாட்டை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: News18