விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து, நிர்வாகி ஒரத்தநாடு ஜெயசங்கர் நீக்கம் செய்யப்பட்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டமையால், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியின் மண்டலத் துணை செயலாளர் பொறுப்புக்கு அண்மையில் நியமனம் செய்யப்பட்ட ஒரத்தநாடு ஜெயசங்கர், அப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தும் நீக்கப்படுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.