விசிக, ஐயூஎம்எல் அமைச்சர்கள் பதவியேற்பு

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஏ.எம்.ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக இன்று (மே 22) பதவியேற்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் நிகழ்வில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இருவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். வன்னியரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படுகிறது. நேற்று தவெக, காங்கிரஸின் 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி