திமுக 59 தொகுதிகளில் வெற்றி பெற்றதில் விசிகவின் பங்கு உள்ளது, ஆனால் அதைப் பற்றி யாரும் பேச மாட்டார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர், தீர்மானிக்கும் சக்தியாக விசிக இருப்பதால் பலரும் ஆதங்கப்படுகின்றனர். விசிக இருக்கும் கூட்டணியை உடைக்கவும், அந்த இடத்தை அடையவும் சிலர் முயற்சிக்கின்றனர். நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பதாக கூறுகின்றனர். இதற்கெல்லாம் வயிற்றெரிச்சல் தான் காரணம் என்றார். இதன்மூலம் வைகோவை திருமா மறைமுகமாக சாடியுள்ளார்.