தவெக அமைச்சரவையில் விசிக.. இன்று மாலை அப்டேட் கொடுக்கும் திருமாவளவன்

“தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து இன்று (மே.21) மாலைக்குள் அறிவிக்கப்படும்” என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், “பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்து சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாகும்” என்றார். முன்னதாக, தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி அறிவித்திருந்தார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி