விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' படத்தை அறிமுக இயக்குனரான பிரவீன் இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சங்களையே பெற்றது. இதனால் இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை படக்குழு மாற்றியமைத்துள்ளனர். இனிமேல் திரையரங்குகளில் இந்த கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கலாம் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.