திருவண்ணாமலையை சேர்ந்த வழக்கறிஞர் வேளாண் காமராஜ், விசிக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் இன்று (ஜூன் 17) நாயுடு மங்கலம் ரயில்வே கேட் அருகே வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.