400 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்த விஷால்

ரஞ்சியில் நடைபெற்ற 2026 தேசிய சீனியர் தடகள போட்டியில், இந்திய வீரர் விஷால் 400 மீட்டர் ஓட்டத்தை 44.98 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், 45 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இந்த இலக்கை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், 2025ல் மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப்பில் அவர் படைத்திருந்த 45.12 வினாடிகள் என்ற தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி