சூலக்கரை: கிராம உதவியாளர்கள் சாலை மறியல்

விருதுநகரில் கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,700 வழங்க வேண்டும், சிபிஎஸ் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சந்தா தொகையை அரசு பங்களிப்புடன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை சூலக்கரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி