விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 834 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 10,242 மகளிர்களுக்கு ரூ. 86.96 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு வழங்கினார்.