விருதுநகர்: போதையில் இளைஞரை சரமாரியாக தாக்கும் மூன்று இளைஞர்கள்

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளனர். கார்த்திகேயன் கேள்வி கேட்டபோது, அவர்கள் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், காவல்துறையினர் காளிராஜ் (27) மற்றும் ரமேஷ் (26) ஆகிய இருவரை கைது செய்து, மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி