விருதுநகர் மாவட்டத்தில் 11 தொழிற்பிரிவுகளில் பதிவு செய்துள்ள 1100 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கொத்தனார் பிரிவில் 7 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நிறைவடைந்ததும் சான்றிதழ் வழங்கப்படும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, நலவாரிய அட்டை, வங்கி கணக்கு நகல், ஆதார், கடவுச்சீட்டு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.